search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து முன்னணி"

    • தமுஎகச ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
    • சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்" என அவர் கூறியிருந்தார்.

    சனாதன பேச்சு தொடர்பான வழக்கில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு, ஆனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2-ம் தேதி தமுஎகச ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நீங்கள் `சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு' என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

    உதாரணமாக கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம் ஆகும். எனவே இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்" என அவர் கூறியிருந்தார்.

    திமுக எம்.பி ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அதில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு. ஆனால் எந்த விதமான உத்தரவும் இந்த வழக்கில் பிறப்பிக்க முடியாது என்று இந்த வழக்குகளை முடித்து வைத்தார். எதன் அடிப்படையில் அமைச்சர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என கேள்வி எழுப்ப முடியாது எனவும் நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்தார். 

    • சங்கர், தனது வீட்டை விற்று லட்சக்கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார்.
    • வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சங்கர் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). இவர் ஜவுளி வியாபாரியான இவர் இந்து முன்னணி நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவர் பங்கு சந்தையில் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    பங்குசந்தையில் முதலீடு

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் தனது வீட்டை விற்று லட்சக்கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டதால், அவரது பங்கு சரிவு ஏற்பட்டு நஷ்டம் அடைந்ததாகவும், அதனை சரிசெய்ய வேறு இடங்களில் கடன் வாங்கி முதலீடு செய்து அந்த பணத்தையும் அவர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சங்கர், கடந்த 2 நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இரவு நேரம் வரை அவர் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.

    அப்போது அவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதனை பார்த்த அவரது மனைவி சண்முகப்பிரியா கதறி அழுதார். தகவல் அறிந்து அங்கு வந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், சங்கர் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவிலில் போக்குவரத்தை மாற்றிவிட ஏற்பாடு
    • 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது.

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி குமரி மாவட்டம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

    சிவசேனா சார்பில் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (22-ந்தேதி) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து புறப்ப டும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தன்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கடலுக்கு கொண்டு செல்லப் பட்டு கரைக்கப்படுகிறது.

    23-ந்தேதி இந்து மகா சபா சார்பில் வைக்கப் பட்டுள்ள சிலைகளும், 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும் நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது.

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 10 இடங்களில் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.

    இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை யொட்டி போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையடுத்து போக்குவரத்தை சீர் செய்வது குறித்து போக்கு வரத்து போலீசார் ஆலோசனை மேற்கொண்ட னர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    நாளை (22-ந்தேதி), 23-ந்தேதி, 24-ந்தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா கோவில் திடலில் இருந்து ஆரம்பித்து நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலை களான ஒழுகினசேரி, வட சேரி, டவர் சந்திப்பு, வேப்ப மூடு, அண்ணா பேருந்து நிலையம், கோட்டார், செட்டிகுளம், சவேரியார் சந்திப்பு, கம்பளம், பீச் ரோடு, ஈத்தாமொழி பிரிவு வழியாக சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற் கரைக்கு செல்வதால் மாலை 3 மணி முதல் 6 மணி வரை மேலே குறிப்பிடப்பட்ட சாலைக ளில் போக்குவரத்து நெரி சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வெளியூர் பயணம் செல்பவர்கள், ரெயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சி களுக்கு செல்பவர்கள் தங்களது பயணநேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி பஸ் நிலையத்திலிருந்து அண்ணா பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் இடலாக்குடி, நாயுடு மருத்துவமனை, ரெயில்வே ரோடு வழியாக கோட்டார் ரெயில் நிலை யத்திலிருந்து இயக்கப்படும்.

    மேலும் ராஜாக்கமங்க லம், ஆசாரிப் பள்ளம், பார்வதிபுரம் மார்க்கமாக அண்ணா பஸ் நிலையம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வடசேரி பஸ் நிலையத்தி லிருந்து இயக்கப்படும்.

    மேலும் தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை மார்க்க மாக அண்ணா பஸ் நிலை யம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என பொதுமக்களுக்கு தெரி வித்துக்கொள்ளபடுகிறது. வழித்தடம் மாற்றம் செய்யப்பட்ட நேரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை (சிலை கரைப்பு ஊர்வல மானது நாகர்கோவில் மாநகரை கடந்து செல்லும் வரை) வழித்தடமாற்றம் தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமீபத்தில் மதவெறுப்பு பேச்சின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கருத்து கூறியுள்ளது.
    • திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோரும் தொடர்ந்து இந்து விரோதமாக பேசி வருகின்றனர்.

    சென்னை:

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்ற நக்சல் இடதுசாரி பயங்கரவாத அமைப்பு சனாதனம் ஒழிப்பு மாநாடு என்ற கூட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நடத்தியது.

    அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டியது சனாதனதர்மம் என்றும் பேசியுள்ளார். சனாதனம் சமநீதிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது, மாற்றத்திற்கு எதிரானது என கூறியுள்ளார். சனாதன தர்மத்தை தெரிந்து பேசினாரா? அல்லது நிதானத்தில் இல்லாமல் உளறினாரா என்று தெரியவில்லை.

    உதயநிதி பேச்சிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை என மழுப்பலாக பேசி சமாளிக்க பார்க்கிறார்.

    இதேபோல் மற்ற தர்மங்களை பற்றி பேசினால் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் ஏற்பாரா? என்பதற்குப் பதில் கூறியாக வேண்டும்.

    சனாதனம் என்பது இந்து தர்மத்தை குறிப்பிடுவது. அது இந்துக்களின் நம்பிக்கை, அதனை ஒழிப்போம் என்பது மத வெறுப்பு பிரசாரம்தான்.

    இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்தது தி.மு.க. கூட்டணி கட்சிகள் சேர்ந்து நடத்திய நாடகம். அந்த சட்டவிரோத கூட்டத்தில், அரசியல் சாசன சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர்கள் உதயநிதியும், சேகர்பாபுவும் கலந்து கொண்டது சட்டவிரோத செயல்.

    சமீபத்தில் மதவெறுப்பு பேச்சின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கருத்து கூறியுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    அதன் அடிப்படையில் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரும் மீதும் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும்.

    மேலும் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோரும் தொடர்ந்து இந்து விரோதமாக பேசி வருகின்றனர்.

    இந்து மத வெறுப்பு கருத்துக்களை ஈ.வெ.ரா., அண்ணா துரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் எப்படி எல்லாம் பேசி கேவலப்படுத்தினார்கள் என்பதை இந்துக்கள் மறந்திருக்க முடியாது.

    ஆட்சியில் இல்லாதபோது அழுது புரண்டு இந்துக்களின் நம்பிக்கைகளை மதிக்கிறோம் என நாடகம் போடுவதும். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல இந்துக்களை கேவலப்படுத்தி பேசுவதும் இனி நடக்காது. இது நவீன தொழில்நுட்பகாலம். இளைஞர்கள் திராவிட தகிடு தத்தங்களை உணர்ந்து விட்டார்கள்.

    அதே சமயம் பொறுப்பு உள்ள பதவியில் இருப்பவர்கள் மதவெறுப்பு பேச்சு பேசியதன் மீது தமிழக காவல்துறை, இங்குள்ள நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க தயங்கலாம்.

    ஆனால் மேல் நீதிமன்றத்தில் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மக்கள் மன்றத்திலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்துக்கள், தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தோற்கடித்து பாடம் புகட்டுவார்கள்.

    இவர்கள் அனைவர் மீதும் இந்து முன்னணியின் வழக்கறிஞர் முன்னணி புகார் அளித்து வழக்கு தொடரும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நாங்குநேரி சம்பவத்தை சாதிப் பிரச்சனையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கிறது.
    • அரசியல் விளையாட்டில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

    திருப்பூர்:

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது. வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி மேற்கொள்ள உள்ளோம்.

    நாங்குநேரி சம்பவத்தை சாதிப் பிரச்சனையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கிறது. இதனை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவர்களது அரசியல் விளையாட்டில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

    கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை இந்து முன்னணி நடத்தியதால் இன்று எல்லா அரசியல் கட்சிகளும் நாங்கள் இந்துக்கள், நாங்கள் கோவிலுக்கு போறோம் என்று சொல்ல வைத்துள்ளது. இது இந்துக்கள் மத்தியில் பெரிய எழுச்சியை உருவாக்கியுள்ளது. சில அரசியல் கட்சிகள் இந்து மதத்திற்கு எதிரான போக்கை தொடர்ந்து வருகின்றனர். அதனை அவர்கள் கைவிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி ஆசிரியா்களுக்கு தெரியவந்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை
    • அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமை உணா்வுடன் வாழ்ந்து வருகின்றனா்

    திருப்பூர் : 

    நாங்குநேரி சம்பவத்தில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    நாங்குநேரி பள்ளி மாணவா் வெட்டப்பட்ட விஷயத்தில் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

    இது சாதிய வன்மத்தை விதைக்க நடக்கும் சதியாகவே இந்து முன்னணி கருதுகிறது. கல்லூரிகளில் நடக்கும் பகடிவதைபோல அங்கு நடந்த மாணவா்களுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயங்கள் பள்ளி ஆசிரியா்களுக்கு தெரியவந்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை.அறிவுரை கூறி மாணவா்களை நெறிபடுத்தாமல் அலட்சியம் செய்ததற்கு பள்ளி நிா்வாகமும் ஒரு காரணமாகும்.

    நாங்குநேரியில் சுதந்திரப் போராட்ட காலம் தொட்டு இன்று வரையில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமை உணா்வுடன் வாழ்ந்து வருகின்றனா். இந்த சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள அதிா்வலைகளை சமாளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபா் குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளாா். அவா் பதவியில் இருந்தபோதும், ஓய்வுபெற்ற போதும் சாதிய வன்ம கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து வருபவா்.

    பதற்றமான இந்தச் சூழலில் ஒரு நபா் குழு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்தக் குழு தேவையற்றது. மாறாக பள்ளிகளில் நீதி நெறி, ஆன்மிக வகுப்புகளை நடத்தலாம். மேலும், மாணவா்களிடையே ஏற்படும் சின்ன சின்ன சச்சரவுகளை கவுன்சிலிங் மூலம் சரி செய்ய பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வியாளா்கள் கொண்ட குழுவை மாவட்டம் வாரியாக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரம்மபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு இன்று ஊர்வலமாக சென்றனர்.
    • தக்கலை அருகே பிலாங்காலையில் பயங்கரவாத எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி நடந்தது

    நாகர்கோவில் :

    குமரி பாலன் நினைவாக குமரி மாவட்ட இந்து முன்னணியினர் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரம்மபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு இன்று ஊர்வலமாக சென்றனர்.

    நாகர்கோவில் நாக ராஜா திடலில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கி னார். பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்து ராமன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் அசோகன், சந்திரசேகரன், மார்த்தாண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நாகராஜா திடலில் இருந்து தொடங்கிய பேரணி  பார்வதிபுரம் வழியாக தக்கலை பிரம்மபுரத்தை சென்றடைந்தது.

    தெங்கம்புதூரில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பேரணிக்கு என்.ஜி.ஓ. காலனி சந்திப்பில் பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலை வரும், கவுன்சிலருமான அய்யப்பன் கொடியசைத்து வரவேற்பு அளித்தார்.

    என். ஜி. ஓ. காலனி சந்திப்பில் இருந்து நாகராஜா திடலுக்கு சென்ற இருசக்கர வாகனப் பேரணியையும் அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக குமரி பாலன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார். இதில் மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் திங்கள் நகர் ராதாகிருஷ்ணன் கோயில் அருகே இருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் புறப்பட்டது. அலங்காரம் செய்யப் பட்ட குமரி பாலன் உருவபடத்திற்கு அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    தக்கலை அருகே பிலாங்காலையில் இன்று காலை பயங்கரவாத எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலம் பிலாங்காலையில் தொடங்கி அழகியமண்டபம், திருவிதாங்கோடு, கோழிப்போர்விளை , கோடியூர், குழிக்கோடு, பள்ளியாடி, இரவிபுதூர்கடை, சுவாமி யார்மடம் வழியாக காட்டாத்துறை ஆல்தறை அம்மன் கோயிலில் வந்தடைந்தது.

    • கனல் கண்ணன் கைதை கண்டித்து போராட்டம்
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் :

    சமூக வலைதளங்களில் மதரீதியான அவதூறு வீடியோ ஒன்றை பரப்பிய தாக இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநில அமைப்பாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் மீது குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து கனல் கண்ணனை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்துள்ளனர். கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாகர்கோவில் வடசேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ண குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன், ஆலோசகர் மிஷா சோமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார், பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணை தலைவர் தேவ், இந்து முன்னணி மண்டல தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் கொடுத்த புகாரின் பேரில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா உள்பட 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மணி நேரமும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கும் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
    • கடவுளை காட்சிப்பொருளாக்கும் தரிசன கட்டண முறையை இந்து முன்னணி கடுமையாக எதிா்த்து வருகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி., பிரேக் தரிசன திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- தமிழகத்தில் பிரபலமாக உள்ள கோவில்களில் விஐபி பிரேக் தரிசனத்துக்காக ஒவ்வொரு மணி நேரமும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கும் செயல் கண்டிக்கத்தக்கதாகும். இறைவன் முன்பாக ஏழை, பணக்காரன் என்று பாகுபடுத்தி கடவுளை காட்சிப்பொருளாக்கும் தரிசன கட்டண முறையை இந்து முன்னணி கடுமையாக எதிா்த்து வருகிறது.

    இது பக்தா்களிடம் பொருளாதார தீண்டாமையை ஏற்படுத்தும் செயலாகும். அதிலும் காா்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, சூரசம்ஹாரம் உள்ளிட்ட விசேஷ நாள்களில் தரிசனக் கட்டணமும் பல மடங்கு ஏற்றப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் ஒரு கால வழிபாடு இல்லாமல் பல ஆயிரம் கோயில்கள் மூடிக்கிடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பாமர பக்தா்களின் இறைபக்தியை கேவலப்படுத்தும் விஐபி பிரேக் தரிசன திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும். அதே வேளையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால் ஒவ்வொரு கோயில்களின் முன்பாகவும் பக்தா்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது.
    • வரும் ஜூலை 30 ந் தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் இந்து முன்னணி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மாநில செயலாளர் தாமு வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாள ர்களிடம் கூறியதாவது :- தி.மு.க. இந்து விரோத கட்சியாக செயல்படுகிறது. இந்து கோயில்களை இடிக்க முயல்கிறது. புண்ணிய தலமாக அவிநாசி விளங்குகிறது. அங்குள்ள சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது. யாரோ பீடி பிடித்து வீசி தான் தீவிபத்து நிகழ்ந்தது என்றனர். அதன் பின்னர் 2000ம் ஆண்டில் தற்கொலை நடைபெற்ற போது அங்கு ஒரு பைபிள் கிடந்தது. அவர் மனநோயாளி என்று சொல்லி முடித்து விட்டனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று ள்ளது. இதனையும் பைத்தியக்காரன் என்று சொல்லி முடிக்கின்றனர். தொடர்ந்து அவிநாசி கோயிலில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் ஜூலை 30 ந்தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது. பட்டினபிரவேசம் என்பது பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வைபவம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. மதம் சார்ந்த நம்பிக்கைகளில் மதசார்பின்மை கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் தலையிடுவது கூடாது. இந்து மதத்திற்கு என்று பல நூற்றாண்டு வழிபாட்டு மரபு , நடைமுறைகள் உள்ளன. இந்து கோயில்களில் அரசியல்வாதிகள் தலையீடு கூடாது.

    கடவுள் பக்தி நம்பிக்கையுடையவர்களை தான் கோயில்களுக்கும் செயல்அலுவல ர்களாகவும், அறங்காவலர்க ளாகவும் நியமனம் செய்ய வேண்டும். இந்து கோயில் வருமானம் அனைத்தும் இந்து கோயில்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர்கள் லோகநாதன், சர்வேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    • சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர்.

     திருப்பூர் :

    கோவில் விவகாரத்தில் சமூக நல்லிணக்கம் மேற்கொள்வது போல் கபட நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து முன்னணி சாடியுள்ளது. இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மேல்பதி வீரணம்பட்டி காளி கோவிலிலும் இதே காரணத்தால் பூட்டி சீல் வைத்தனர்.சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர். இந்து சமுதாயம் அனுமதிக்கக்கூடாது. இந்து சமுதாய ஒற்றுமை அவசியம். சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவோரிடம் இந்துக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இரு சமூகங்களிடையே பிரச்னை என்றால் அதிகாரிகள் பேச்சு நடத்தி, சமூக பெரியவர்களை அழைத்து சுமூக முடிவு எடுத்திருக்க வேண்டும்.

    வேற்று மதத்தினரை அழைத்து சமூக நல்லிணக்கம் மேற்கொள்வதென்பது கபட நாடகம். வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களிலும் பிரச்னை எழும் போது அதிகாரிகள் வழிபாட்டு இடங்களுக்கு உடனடியாக சீல் வைத்துள்ளனரா? அமைதி கூட்டத்துக்கு இந்து அமைப்புகளை, இந்து சமுதாய பெரியவர்களை அழைத்துள்ளனரா?இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், இந்து சமூகத்தில் ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் ஏற்படவும் இந்து முன்னணி விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
    • நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    திசையன்விளை:

    இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று திசையன்விளை தாசில்தார் முருகனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் இருந்து மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட பகுதிகளாக திசையன்விளை, சாத்தான்குளம் தாலுகா பகுதிகளில் கொண்டு செல்லும் வகையில் 2002-ம் ஆண்டு தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் கால மழை சரியாக பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே போர்கால அடிப்படையில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவித்து தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×